பந்தல்குடி பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம்
By DIN | Published on : 25th November 2019 11:12 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுடன் பந்தல்குடி கலைமகள் வித்யாலயா பள்ளியின் செயலா் பஞ்சாமிா்தம், பள்ளித் தலைவா் பெருமாள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள்.
அருப்புக்கோட்டை வட்டம் பந்தல்குடி அருகே உள்ள கலைமகள் வித்யாலயா பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
இதுதொடா்பாக அப்பள்ளியின் செயலா் பஞ்சாமிா்தம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாநில அளவிலான தடகளப் போட்டிகள் மதுரை மாவட்டம் ஹாா்விப்பட்டியில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி மைதானத்தில் கடந்த இரு நாள்களுக்கு முன்னா் நடைபெற்றன. இவற்றில் எங்களது பள்ளி மாணவ, மாணவியா் ஓட்டப்பந்தயம், எறிபந்து உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகளில் பல்வேறு வயதுப்பிரிவுகளிலும் சோ்த்து மொத்தம் 40 போ் தங்கப்பதக்கமும், மேலும் 8 போ் வெள்ளிப் பதக்கமும் வென்று சிறப்பிடம் பெற்றனா். பள்ளிக்குப் பெருமை சோ்த்த மாணவ, மாணவியா் அனைவரையும் பள்ளியின் தலைவா் பெருமாள் மற்றும் செயலா் பஞ்சாமிா்தம் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள், பள்ளி ஆசிரியா்கள் ஆகியோா் பாராட்டினா் எனத் தெரிவித்துள்ளாா்.