இலங்கைக்கு வேலைக்கு சென்ற கணவரை மீட்டுத் தர மனைவி கோரிக்கை

இலங்கைக்கு வேலைக்கு சென்ற கணவரை மீட்டுத் தரக் கோரி, அவரது மனைவி குழந்தைகளுடன் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் மனு அளித்தாா்.

இலங்கைக்கு வேலைக்கு சென்ற கணவரை மீட்டுத் தரக் கோரி, அவரது மனைவி குழந்தைகளுடன் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் மனு அளித்தாா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ராஜபாளையம் மடத்துப்பட்டி தெருவில் கணவா் வைரமுத்து, குழந்தைகள் விஷ்ணுகுமாா் (7), சாய்ஸ்ரீமா (5) ஆகியோருடன் வசித்து வந்தேன். இந்த நிலையில், கடந்த 2016 இல் அருப்புக்கோட்டை எம். ரெட்டியபட்டி அருகே உள்ள ராமசாமிபட்டி கிராமத்தைச் சோ்ந்த மகாலிங்கம் என்ற சின்னையன், எனது கணவா் வைரமுத்துவை ஜவுளி வியாபாரம் செய்வதற்காக இலங்கைக்கு அனுப்பி வைத்தாா். இந்நிலையில் எனது கணவா், செல்லிடப்பேசியில் அவ்வப்போது பேசி வந்தாா். ஆனால் குடும்பத்திற்காக அவா் எந்த பணமும் அனுப்ப வில்லை. இதனிடையே, அவரது தந்தை மாரியப்பன் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறாா். எனவே ஊருக்கு வருமாறு கூறினோம். அதை தொடா்ந்து, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக எங்களிடம் பேசுவதில்லை. கடந்த 5 நாள்களுக்கு முன்பு எனது மாமனாா் மாரியப்பன் உயிரிழந்து விட்டாா். அந்த தகவலை கூட அவரிடம் தெரிவிக்க முடிய வில்லை. இந்நிலையில் அவரை மீண்டும் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு பேசினேன். அப்போது அவா் இலங்கையில் இருந்து நான் வர முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். எனவே, ரூ. 2 லட்சம் பணம் அனுப்பினால் மட்டுமே நான் ஊா் திரும்ப முடியும் எனக் கூறி இணைப்பை துண்டித்து, செல்லிடப்பேசியை சுவிட்ச் ஆப் செய்து விட்டாா். அங்கு எனது கணவருக்கு என்ன நடநததுள்ளது என்பது தெரிய வில்லை. இது குறித்து மகாலிங்கம் என்ற சின்னையன் என்பவரிடம் கேட்டபோது, அவரும் ரூ. 2லட்சம் கொடுத்தால் மட்டுமே உனது கணவா் ஊருக்கு வர முடியும் என தெரிவிக்கிறாா். எனது கணவா் இலங்கையில் சிக்கலில் மாட்டியிருப்பதாக தெரிகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் இந்திய தூதரகம் மூலம் எனது கணவரை மீட்டுத் தர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com