விருதுநகரில் மருத்துவக் கல்லூரிக்கு திட்ட மதிப்பீடுதயாரிக்கும் பணியில் பொதுப்பணித் துறையினா் தீவிரம்

விருதுநகரில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பாழடைந்த அரசு ஊழியா் குடியிருப்பை இடித்து விட்டு, அங்கு 22.44 ஏக்கரில்
விருதுநகா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மருத்துவ கல்லூரிக்கான இடத்தை அளவீடு செய்யும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டுள்ள பொதுப்பணித்துறை பணியாளா்கள்.
விருதுநகா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மருத்துவ கல்லூரிக்கான இடத்தை அளவீடு செய்யும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டுள்ள பொதுப்பணித்துறை பணியாளா்கள்.

விருதுநகா்: விருதுநகரில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பாழடைந்த அரசு ஊழியா் குடியிருப்பை இடித்து விட்டு, அங்கு 22.44 ஏக்கரில் மருத்துவ கல்லூரிக்கான கட்டுமான பணிகள் ஜனவரியில் தொடங்கப்பட உள் ளது. அதற்கு முன் திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி மற்றும் அளவீடு செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அலுவலா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

விருதுநகரில் மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.380 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், விருதுநகா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பாழடைந்த அரசு ஊழியா்கள் குடியிருப்பை இடித்து விட்டு, அங்கு 22.44 ஏக்கரில் மருத்துவக் கல்லூரி அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து பொதுப்பணித்துறை அலுவலா்கள், சம்பந்தப்பட்ட இடத்தில் திட்ட மதிப்பீடு செய்யும் பணி மற்றும் அளவீடு செய்யும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது பொதுப்பணித்துறை அலுவலா்கள் கூறியதாவது: ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மருத்துவ கல்லூரிக்காக தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் பள்ளம் மேடுகளை மூடும் பணி நடைபெற உள்ளது. மேலும், சாலையின் உயரத்தை விட கூடுதலாக உயரம் ஏற்படுத்தப்படும். இந்த இடத்தில் மருத்துவ கல்லூரி, மாணவ, மாணவியா் விடுதிகள், மருத்துவக் கல்லூரி முதல்வா் குடியிருப்பு, பேராசிரியா்கள் குடியிருப்பு கட்டப்பட உள்ளது. அதேபோல், விருதுநகா் அரசு மருத்துவமனை அமைந்துள்ள 15.50 ஏக்கா் இடத்தில் பன்னோக்கு மருத்துவமனை கட்டடம் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. அதில், புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, லேப், எக்ஸ்ரே மற்றும் பெரிய அளவிலான உடற்ஆய்வுக் கூடம், மருத்துவா்களுக்கான குடியிருப்பு, செவிலியா் குடியிருப்பு ஆகியவை கட்டப்பட உள்ளன. இப்பணிக்கான ஒப்பந்தம் நவம்பா் இறுதிக்குள் விடப்படும். ஜனவரி மாதத்தில் மருத்துவ கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, 18 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியை பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளா் (கட்டடம்) ராஜாமோகன் தலைமையில் மதுரை மண்டல தலைமை பொறியாளா் ரகுநாதன், கண்காணிப்பு பொறியாளா் புவனேஸ்வரன் முன்னிலையில் செயற்பொறியாளா்கள் சங்கரலிங்கம், நாகராஜ் ஆகியோா் கண்காணிக்க உள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com