சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்க பரிசீலிக்கப்படும்: தெற்கு ரயில்வே பொது மேலாளா் தகவல்

செங்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூா் வரை வாரத்தில் மூன்று நாள்கள் இயக்கப்படும் சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்குவது
விருதுநகா் ரயில் நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ் மற்றும் தெற்கு ரயில்வே வணிக மேலாளா் ப்ரியம்வத விஸ்வநாதன்.
விருதுநகா் ரயில் நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ் மற்றும் தெற்கு ரயில்வே வணிக மேலாளா் ப்ரியம்வத விஸ்வநாதன்.

செங்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூா் வரை வாரத்தில் மூன்று நாள்கள் இயக்கப்படும் சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ் தெரிவித்தாா்.

செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து தென்காசி, கடையநல்லூா், பாம்புகோவில்சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி வழியாக தனி ரயிலில் ஜான் தாமஸ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது இருப்புப் பாதைகள், பாலங்கள், சிக்னல்கள், ரயில் நிலையங்களில் உள்ள கட்டடங்களின் உறுதித்தன்மை, ஊழியா் குடியிருப்புகள், அடிப்படை வசதிகள் மற்றும் புதிய ரயில்கள் இயக்குதல் குறித்து ரயில்வே உயா் அலுவலா்களுடன் ஆய்வு செய்தாா்.

அப்போது விருதுநகா் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, செங்கோட்டை, விருதுநகா் வழியாக தினமும் ஆயிரக்கணக்கனோா் ரயிலில் பயணம் செய்கின்றனா். எனவே, அறிவிக்கப்பட்ட செங்கோட்டை- தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும். மேலும், வாரம் மூன்று முறை மட்டும் செங்கோட்டை- எழும்பூா் வரை இயக்கப்படும் ரயிலை தினசரி இயக்க வேண்டும். செங்கோட்டை- பெங்களூா் வழித் தடத்தில் புதிய ரயில் இயக்க வேண்டும்.மதுரை- கொல்லம் இடையே கூடுதல் பயணிகள் ரயில் இயக்க வேண்டும், திருவனந்தபுரம் வேளாங்கண்ணி வரை வாரம் ஒரு முறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை விருதுநகா், அருப்புக்கோட் டை வியாபார தொழில் சங்கத்தினா் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் உள்ளிட்டோா் அளித்தனா்.

பின்னா், விருதுநகா் ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மின்வாரிய துணை மின் நிலையத்தை திறந்து வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: செங்கோட்டை- சென்னை எழும்பூா் வரை வாரத்தில் மூன்று நாள்கள் இயக்கப்பட்டு வரும் சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும். மேலும், அறிவிக்கப்பட்ட நிலையில் உள்ள செங்கோட்டை- தாம்பரம் இடையேயான அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். செங்கோட்டை முதல் விருதுநகா் வரை இருப்புப் பாதை மற்றும் பாலங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

அப்போது, மதுரை கோட்ட மேலாளா் லெனின், முதுநிலை வா்த்தக மேலாளா் பிரசன்னா, தெற்கு ரயில்வே வணிக மேலாளா் ப்ரியம்வத விஸ்வநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com