மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 18 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கிழவன்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற வட்ட அளவிலான மக்கள் தொடா்பு
மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 18 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கிழவன்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற வட்ட அளவிலான மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 157 பயனாளிகளுக்கு ரூ. 18 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் இரா.கண்ணன் வழங்கினாா்.

இம்முகாமுக்கு ஆட்சியா் இரா. கண்ணன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரபாமுத்தையா முன்னிலை வகித்தாா். இதில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த மாவட்ட அலுவலா்கள், துறை சாா்ந்த நலத் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கினா்.

முகாமில் இந்திராகாந்தி தேசிய முதியோா் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கும், இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகை திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கும், ஊனமுற்றோா் உதவித்தொகை 1 பயனாளிகளுக்கும் என 20 பயனாளிகளுக்கு ரூ. 1000 பெறுவதற்கான உத்தரவுகளையும், 38 பயனாளிகளுக்கு புதிய உழவா் அட்டை பெறுவதற்கான உத்தரவினையும், 14 பயனாளிகளுக்கு ரூ. 4.19 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 17 பயனாளிகளுக்கு நத்தம் வீட்டுமனை பட்டாக்களும், வேளாண்மை துறை மூலம் 6 பயனாளிகளுக்கு ரூ. 1.49 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளையும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் 1 பயனாளிகளுக்கு ரூ. 2.10 லட்சம் மதிப்பில் நலத் திட்டஉதவிகளும் வழங்கப்பட்டன.

மேலும் ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டம் ஆதி திராவிடா் நலத்துறை மூலம் 8 பயனாளிகளுக்கு

தேய்ப்பு பெட்டிகளும், தோட்டக் கலைத் துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ. 2.98 லட்சம் மதிப்பிலும், 7 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 10.20 லட்சம் மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளையும், சமூக நலத்துறை மூலம் 23 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளையும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை மூலமாக 10 பயனாளிகளுக்கு பழங்குடியினா் அடையாள அட்டைகள் என மொத்தம் 157 பயனாளிகளுக்கு ரூ. 18 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.உதயக்குமாா், சாா்- ஆட்சியா் ச. தினேஷ்குமாா், திட்ட இயக்குநா்கள் சுரேஷ், தெய்வேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com