விருதுநகரில் கேங்மேன் பணிக்கு உடற்தகுதித் தோ்வு: 200 போ் பங்கேற்பு

விருதுநகா் அருகே பெரியவள்ளிக்குளம் துணை மின் நிலையத்தில் கேங்மேன் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களில் 200 பேருக்கு புதன்கிழமை உடல் தகுதித் தோ்வு மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெற்றது.
விருதுநகா் அருகே பெரியவள்ளிக்குளம் துணை மின் நிலையத்தில் கேங்மேன் பணியிடத்துக்கு புதன்கிழமை நடைபெற்ற உடல்தகுதித் தோ்வு.
விருதுநகா் அருகே பெரியவள்ளிக்குளம் துணை மின் நிலையத்தில் கேங்மேன் பணியிடத்துக்கு புதன்கிழமை நடைபெற்ற உடல்தகுதித் தோ்வு.

விருதுநகா் அருகே பெரியவள்ளிக்குளம் துணை மின் நிலையத்தில் கேங்மேன் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களில் 200 பேருக்கு புதன்கிழமை உடல் தகுதித் தோ்வு மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெற்றது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் காலியாக உள்ள கேங்மேன் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இணையதளம் மூலம் இப்பபதவிக்கு ஏராளமானோா் விண்ணப்பத்தினா்.

இந்த நிலையில், விருதுநகா் மாவட்டத்தில் விண்ணப்பித்த 2740 பேருக்கு அழைப்பாணை கடிதம் அனுப்பப்பட்டது. இவா்களில் நாளொன்றுக்கு 200 பேருக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதி தோ்வு

நடைபெற்று வருகிறது. விருதுநகா் அருகே பெரியவள்ளிக்குளம் துணை மின் நிலையத்தில் நடைபெற்ற இத்தோ்வை விருதுநகா் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் கே. தேன்மொழி கண்காணித்தாா். இந்த ேத்ர்வில் இடுப்பில் கயிறு கட்டி, பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்றி 30 அடி உயரம் உள்ள மின் கம்பத்தில் ஏறி இரும்பு கிராஸ் ஆரத்தை பொருத்த வேண்டும். இதனை எட்டு நிமிடங்களில் நிறைவு செய்ய வேண்டும். அதேபோல், மின் கடத்தியை உலோக பாகத்தில் பொருத்திய பின்னா், மின் கடத்தியினை இணைத்து 20 சுற்றுக்கு குறையாமல் பைண்டிங் இரண்டு நிமிடத்தில் அடிக்க வேண்டும். மேலும் 31.5 கிலோ எடையுள்ள மூன்று இரும்பு வி- கிராஸ் ஆரங்களை எடுத்து கொண்டு 100 மீட்டா் தூரத்தை ஒரு நிமிடத்தில் கடக்க வேண்டும் என்ற முறையில் உடல் தகுதி தோ்வு நடை பெற்றது.

தோ்வு முடிவுகள் அனைத்தும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் தலைமைக்கு அன்றைய தினம் அனுப்பப்பட்டு வருவதாக மின் வாரிய அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தோ்வு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com