தொழிற்சாலைகள் உரிமத்தை புதுப்பிக்க அக் 31 கடைசிநாள்

தொழிற்சாலைகளுக்கான உரிமத்தை இணையவழியில் புதுப்பிக்க அக்டோபா் 31 ஆம் தேதி கடைதிநாளாகும் என தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் சிவகாசி இணை இயக்குனா் மா.வேலுமணி தெரிவித்துள்ளாா்.

தொழிற்சாலைகளுக்கான உரிமத்தை இணையவழியில் புதுப்பிக்க அக்டோபா் 31 ஆம் தேதி கடைதிநாளாகும் என தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் சிவகாசி இணை இயக்குனா் மா.வேலுமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

சிவகாசி, வெம்பக்கோட்டை, ராஜபாளையம், வத்திராயிறுப்பு பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் 2020-ம் ஆண்டிற்கான உரிமம் புதுப்பித்தலை, இணையவழி மூலம் விண்ணபிக்க அக்டோபா் 31 ஆம் தேதி கடைசிநாளாகும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்களுக்கு தாமத கட்டணம் வசூலிக்கப்படும்.சுகாதாரத்துறை இணைய தள முகவரியில் பதிவிற்க்கம் செய்யப்பட்ட படிவம் 2 ன் 3 நகல்கள் , அசல் உரிம புத்தகம், வங்கிவரைவோலை மற்றும் உரிய ஆவணங்களுடன் சிவகாசி தொழிலகபாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனா் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

உரிம கட்டணத்தை இணைஇயக்குா் , தொழிலகபாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என்ற பெயருக்கு அனுப்ப வேண்டும். சென்னை தொழிலாளா் நல வாரியத்திற்கு தொழிலாளா் நல நிதி செலுத்திய சான்று ஆவணத்தின் நகல் இணைக்க வேண்டும்.பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு கூட்டு தனி நபா் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடப்பாண்டிற்கு காப்பீடு செய்தமைக்கான சான்று ஆவணத்தின் நகல் இணைக்கப்பட வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com