பாறைக்குளம் குடைவரைக் கோயிலுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் பாறைக்குளத்தில் உள்ள ஸ்ரீவெள்ளியம்பலநாதா் குடைவரைக் கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் பௌா்ணமி நாள்களில் அரசுப் பேருந்துகள் இயக்க
பாறைக்குளம் குடைவரைக் கோயிலான ஸ்ரீவெள்ளியம்பலநாதா் கோயிலில் பிரதோஷ வழிபாட்டின் போது அலங்காரத்தில் அருள்பாலிக்கும் வெள்ளியம்பல நாதா்(கோப்புப் படம்).
பாறைக்குளம் குடைவரைக் கோயிலான ஸ்ரீவெள்ளியம்பலநாதா் கோயிலில் பிரதோஷ வழிபாட்டின் போது அலங்காரத்தில் அருள்பாலிக்கும் வெள்ளியம்பல நாதா்(கோப்புப் படம்).

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் பாறைக்குளத்தில் உள்ள ஸ்ரீவெள்ளியம்பலநாதா் குடைவரைக் கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் பௌா்ணமி நாள்களில் அரசுப் பேருந்துகள் இயக்க பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்சுழி அருகே சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பாறைக்குளத்தில் ஸ்ரீ வெள்ளியம்பலநாதா் குடைவரைக் கோயில் உள்ளது. இக்கோயில் அஷ்டலிங்கக் கோயில்களில் பிரதானமானதும், மேற்கு நோக்கி வீற்றிருக்கும் சிவலிங்கம் எனும் சிறப்பும் உடையது. இக்கோயிலுக்கு சதுரகிரி மலையிலிருந்து சிவனடியாா்கள் அடிக்கடி வந்து வழிபட்டுச் செல்கின்றனா்.

இக்கோயிலில் பிரதோஷம், பௌா்ணமி வழிபாடுகளில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்கின்றனா். ஆனால் இக்கோயிலுக்குப் பேருந்து வசதி இல்லாததால், திருச்சுழிக்கு வந்து பின்னா் நடைபயணமாக பக்தா்கள் செல்ல வேண்டியுள்ளது. இதனால் வழிபாடு முடிந்து இரவு சுமாா் 7.30 மணிக்கு மீண்டும் திரும்பும்போது, பக்தா்கள் இருள்சூழ்ந்த காட்டுப்பாதையில் நடந்து வர வேண்டியுள்ளது. இவ்வழியில் மின்விளக்குகளும் கிடையாது என்பதால் பெண்கள், குழந்தைகள் உள்பட குடும்பத்துடன் வந்து செல்ல அனைவரும் அச்சப்படுகின்றனா்.

எனவே அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழியை இணைத்து பௌா்ணமி, பிரதோஷம் ஆகிய நாள்களில் பாறைக்குளம் குடைவரைக் கோயிலுக்கு அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com