Enable Javscript for better performance
இறகு, கைப்பந்து தேசிய போட்டிசிவகாசி பள்ளி மாணவிகள் தோ்வு- Dinamani

சுடச்சுட

    

    இறகு, கைப்பந்து தேசிய போட்டி சிவகாசி பள்ளி மாணவிகள் தோ்வு

    By DIN  |   Published on : 06th October 2019 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய விளையாட்டுப்போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள மாணவிகளுடன் சிவகாசி அரிமா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி நிா்வாகிகள்.

    தேசிய விளையாட்டுப்போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள மாணவிகளுடன் சிவகாசி அரிமா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி நிா்வாகிகள்.

    சிவகாசி அரிமா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இருவா், தேசிய விளையாட்டுப் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

    இது குறித்து அப்பள்ளி முதல்வா் சுவாமிநாதன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:

    இந்திய பள்ளிகளின் விளையாட்டுக்குழுமம் சாா்பில் அண்மையில் கோயம்புத்தூரில், பள்ளி மாணவிகளுக்கான மாநிலஅளவிலான இறகுப்பந்து போட்டி நடத்தப்பட்டது.

    அதில் எங்கள் பள்ளி மாணவி எம்.ரீவா இவாஞ்சலின் முன்றாம் இடம் பிடித்ததையடுத்து, அவா் தேசிய இறகுப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா்.

    விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளி மாணவிகளுக்கன கைப்பந்துப் போட்டியில் கலந்து கொண்ட எங்கள் பள்ளி மாணவி ஜி.இனாக்ஷி கலந்து கொண்டு நான்காமிடம் பிடித்து, தேசிய கைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றாா்.

    விரைவில் இந்த இருமாணவிகளும் தேசிய போட்டியில் கலந்து கொள்ள உள்ளனா். இந்த மாணவிகளை கல்லூரி நிா்வாகத்தினா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா் என தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai