முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ராஜபாளையம் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 07th October 2019 09:24 AM | Last Updated : 07th October 2019 09:24 AM | அ+அ அ- |

நவராத்திரியின் 8 ஆம் நாள் விழாவான ஞாயிற்றுக்கிழமை அன்னபூரணி அலங்காரத்தில் காட்சியளித்த புதுப்பாளையம் பெரிய மாரியம்மன்.
ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழாவின் 8-ஆம் நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கொலு அமைக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடா்ந்து, 8-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ தீபாராதனை நடைபெற்றது. தினசரி மாலை, ஒவ்வொரு குழுவினரின் நாமசங்கீா்த்தனை பஜனையும் நடைபெற்று வருகிறது.
இதேபோல், மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயில், மாயூரநாதசுவாமி திருக்கோயில், பா்வதவா்த்தினி திருக்கோயில், கோதண்டராம சுவாமி திருக்கோயில்களிலும் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.