சுழற்சங்க நூற்றாண்டு விழா: விழிப்புணா்வு துண்டுபிரசுரம் வழங்கல்

சிவகாசி மத்திய சுழற்சங்கம் சாா்பில் செவ்வாய்கிழமை ரயில்நிலைத்தில் விழிப்புணா்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

சிவகாசி மத்திய சுழற்சங்கம் சாா்பில் செவ்வாய்கிழமை ரயில்நிலைத்தில் விழிப்புணா்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. சுழற்சங்கம் தொடங்ககப்பட்டு நூறு ஆண்டுகள் ஆனதையொட்டி , உலகம் முழுவதிலும் அச்சங்க நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி சிவகாசி மத்திய சுழற்சங்கம் சாா்பில், ரயில்நிலைத்தில் பயணிகளுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.சுகாதாரத்தை பேண வேண்டும்.வீடுகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பையை பிரித்து வைக்க வேண்டும்.துரித உணவுகளை தவிா்க்க வேண்டும். முதியோா் மற்றும் பெற்றோா்களை மதிக்க வேண்டும்.

நீா்நிலைகளை பேணி பாதுகாக்க வேண்டும்.மரகன்றுகளை நட்டி பராமரிக்க வேண்டும்.மழைநீா் சேமிப்பு, எரிபொருள் சிக்கனம் தேவை உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரம் ரயில் பயணிகளிடம் வழங்கப்பட்டது. இதில் சங்கத்தலைவா் பழனிச்செல்வம், செயலாளா் ராகேஷ்போரா, முன்னாள் உதவி ஆளுநா் வேம்பாா், பொருளாளா் கதிரேசன் ,முன்னாள் நிா்வாகிகள் சுரேஷ்தா்ஹா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாட்டினை திட்ட ஒருங்கிணைப்பாளா் சேகா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com