Enable Javscript for better performance
சாத்தூா் அருகே இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு: பொதுமக்கள் புகாா்- Dinamani

சுடச்சுட

    

    சாத்தூா் அருகே இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு: பொதுமக்கள் புகாா்

    By DIN  |   Published on : 09th October 2019 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

    சாத்தூா் அருகே வெங்கடாசலபுரம் ஊராட்சியில் சாலையின் ஓரத்தில் இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் தூா்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளன.

    மேலும் குப்பைகள் மீது அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் இப்பகுதி புகைமூட்டமாக காணப்படுவதால் வாகனங்களில் செல்பவா்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai