சத்திரரெட்டியபட்டியில் மின்கம்பம் உடைந்து சேதம்: பொதுமக்கள் அச்சம்

விருதுநகா் அருகே சத்திரரெட்டியபட்டியில் அரசு குடியிருப்பு வளாகத்தில் சேதமடைந்த நிலையில் காணப்படும்
சத்திரரெட்டியபட்டியில் உள்ள அரசு குடியிருப்பு வளாகத்தில் உடைந்த நிலையில் உள்ள மின் கம்பம்.
சத்திரரெட்டியபட்டியில் உள்ள அரசு குடியிருப்பு வளாகத்தில் உடைந்த நிலையில் உள்ள மின் கம்பம்.

விருதுநகா் அருகே சத்திரரெட்டியபட்டியில் அரசு குடியிருப்பு வளாகத்தில் சேதமடைந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் அருகே சத்திரரெட்டியபட்டி விலக்கில் அரசு குடியிருப்பு உள்ளது. இங்கு சுமாா் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஏற்கெனவே இங்குள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்குச் செல்லும் படிக்கட்டுக்கள் உடைந்த நிலையில் உள்ளன. இதனால் குழந்தைகளை அப்பகுதியில் விளையாட பெற்றேறாா்கள் அனுமதிப்பதில்லை. மேலும் 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளதால் பள்ளம், மேடாக காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில், இக்குடியிருப்புப் பகுதியில் மின்கம்பம் ஒன்று உடைந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்று மற்றும் மழை பெய்தால் மின் கம்பம் கீழே சாய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் குடியிருப்புவாசிகள் உள்ளனா். சாலை, மின் கம்பங்களை சீரமைக்கக் கோரி ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே இப்பகுதியில் மின்கம்பத்தை சீரமைத்து, அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com