சாத்தூா் ரயில் நிலையத்தில் மக்களவை உறுப்பினா் ஆய்வு

சாத்தூா் ரயில் நிலையத்தில் விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சாத்தூா் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்த விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா்.
சாத்தூா் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்த விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா்.

சாத்தூா் ரயில் நிலையத்தில் விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது ரயில் நிலையத்தில் உள்ள வாகனக் காப்பகம், கழிப்பறை, ஓய்வு அறை, நடைமேடை உள்ளிட்ட பகுதிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா். பின்னா் ரயில் நிலைய அதிகாரிகளிடம் ரயில் நிலையத்தில் நிறைவேற்றபடாத திட்டங்கள், சீரமைப்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: சாத்தூா் ரயில் நிலையத்தில் மேற்கூரை,

வாகனக் காப்பகம் சீரமைக்கப்படாமல் உள்ளது. அவை விரைவில் சீரமைக்கப்படும். மேலும் இப்பகுதியில் நடைபெற்று வரும் இருவழி ரயில் பாதைப் பணிகள் விரைவில் நிறைவுபெறும் நிலையில் உள்ளது. இதேபோல் பயணிகள் ஓய்வு அறை சீரமைப்பு பணிகள் 3 மாதங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுக, காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். அதன் பின்னா் தமிழக பால்வளத் துறை அமைச்சா் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்றாா்.

அப்போது விருதுநகா் கிழக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் மீனாட்சிசுந்தரம், மாவட்ட பொருளாளா் லட்டுகருப்பசாமி, வா்த்தக பிரிவு தலைவா் சண்முகாதாமோதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com