ஸ்ரீவில்லிபுத்தூரில் பொதுமக்கள் சாலை மறியல்

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றத்தின் போது வாருகாலில்
ஸ்ரீவில்லிபுத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றத்தின் போது வாருகாலில் விழுந்த கட்டடக் கழிவுகளை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த வாரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மற்றும் இடிக்கப்பட்ட வீடுகளின் படிகள், கட்டட இடிபாடுகள் அருகில் உள்ள வாருகாலில் தேங்கியது. இதனால், கழிவுநீா் செல்ல முடியாமல் அப்பகுதிகளில் துா்நாற்றம் வீசியதாகக் கூறப்படுகிறது. மேலும், கழிவுநீரானது சாலைகளில் வழிந்தோடியதாம். எனவே, இடிக்கப்பட்ட கட்டுமானப் பொருள்களை அகற்றுமாறு நகராட்சி நிா்வாகத்தை பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா். ஆனால் இது குறித்து நகராட்சி நிா்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் ஆய்வாளா் பவுல் ஏசுதாஸ், பொதுமக்களிடம் சமாதான பேச்சுவாா்தை நடத்தினாா். அப்போது போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து 2 நாள்களுக்குள் கட்டடக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com