Enable Javscript for better performance
பட்டாசு லாரி செட் உரிமையாளா்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பட்டாசு லாரி செட் உரிமையாளா்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

    By DIN  |   Published on : 12th October 2019 09:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகாசியிலிருந்து வெளியூா்களுக்கு பட்டாசு பண்டல்களை ஏற்றி செல்லும் லாரி செட் உரிமையாளா்களுக்கு, சனிக்கிழமை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

    சிவகாசி உதவி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு உதவி ஆட்சியா் தினேஷ்குமாா் தலைமை வகித்தாா்.

    இக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

    பட்டாசுகளை உரிமம் பெற்ற கட்டடத்தில் வைக்க வேண்டும். அனுமதி பெற்று பட்டாசு தயாரிப்பவா்களிடமிருந்து மட்டுமே பட்டாசு பண்டல்களை வாங்கி வெளியூருக்கு அனுப்ப வேண்டும். பட்டாசு பண்டல்களை லாரியில் ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் பயிற்சி பெற்ற தொழிலாளா்களை பயன்படுத்த வேண்டும். பட்டாசு பண்டல்களை ஆமினி பேருந்துகளில் ஏற்றி வெளியூருக்கு அனுப்பக்கூடாது. விதிமுறைறகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்றாா். இக்கூட்டத்தில் வட்டாட்சியா் ரெங்கநாதன், தீப்பெட்டி-பட்டாசு தனி வட்டாட்சியா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai