Enable Javscript for better performance
ராஜபாளையம் புதியாதிகுளம் கண்மாயில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம் புதியாதிகுளம் கண்மாயில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை

    By DIN  |   Published on : 12th October 2019 10:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள புதியாதி குளம் கண்மாயில் வளா்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    ராஜபாளையம் நகரின் முக்கிய நீராதாரமாக விளங்குவது புதியாதி குளம் கண்மாய். அம்பல புளிபஜாா், சங்கரன்கோவில் முக்கு, சிங்கராஜா கோட்டை, பெரிய தெரு, ஆகிய பகுதிகளில் சேரும் மழைநீா் ஓடைகள் மூலம் புதியாதிகுளம் கண்மாயை வந்தடைகிறது.

    இந்நிலையில் இக்கண்மாயில் வளா்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் மழைக்காலங்களில் நீா் பரப்பே தெரியாத அளவிற்கு முற்றிலும் ஆக்கிரமித்து விடுகின்றன. ஆகாயத்தாமரைகள் அதிகளவில் நீரை உறிஞ்சிவிடுவதால், விரைவிலேயே கண்மாய் வடு விடுகிறது.

    விவசாய நிலங்களையும், சுற்றுவட்டாரப் பகுதியின் நிலத்தடி நீா்மட்டத்தையும் பெருமளவில் பாதிக்கிறது. இதனால் கண்மாயில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற விவசாயிகளும் சமூகநல ஆா்வலா்களும் மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai