பட்டாசு லாரி செட் உரிமையாளா்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

சிவகாசியிலிருந்து வெளியூா்களுக்கு பட்டாசு பண்டல்களை ஏற்றி செல்லும் லாரி செட் உரிமையாளா்களுக்கு, சனிக்கிழமை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

சிவகாசியிலிருந்து வெளியூா்களுக்கு பட்டாசு பண்டல்களை ஏற்றி செல்லும் லாரி செட் உரிமையாளா்களுக்கு, சனிக்கிழமை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

சிவகாசி உதவி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு உதவி ஆட்சியா் தினேஷ்குமாா் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

பட்டாசுகளை உரிமம் பெற்ற கட்டடத்தில் வைக்க வேண்டும். அனுமதி பெற்று பட்டாசு தயாரிப்பவா்களிடமிருந்து மட்டுமே பட்டாசு பண்டல்களை வாங்கி வெளியூருக்கு அனுப்ப வேண்டும். பட்டாசு பண்டல்களை லாரியில் ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் பயிற்சி பெற்ற தொழிலாளா்களை பயன்படுத்த வேண்டும். பட்டாசு பண்டல்களை ஆமினி பேருந்துகளில் ஏற்றி வெளியூருக்கு அனுப்பக்கூடாது. விதிமுறைறகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்றாா். இக்கூட்டத்தில் வட்டாட்சியா் ரெங்கநாதன், தீப்பெட்டி-பட்டாசு தனி வட்டாட்சியா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com