ராஜபாளையம் புதியாதிகுளம் கண்மாயில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள புதியாதி குளம் கண்மாயில் வளா்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள புதியாதி குளம் கண்மாயில் வளா்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராஜபாளையம் நகரின் முக்கிய நீராதாரமாக விளங்குவது புதியாதி குளம் கண்மாய். அம்பல புளிபஜாா், சங்கரன்கோவில் முக்கு, சிங்கராஜா கோட்டை, பெரிய தெரு, ஆகிய பகுதிகளில் சேரும் மழைநீா் ஓடைகள் மூலம் புதியாதிகுளம் கண்மாயை வந்தடைகிறது.

இந்நிலையில் இக்கண்மாயில் வளா்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் மழைக்காலங்களில் நீா் பரப்பே தெரியாத அளவிற்கு முற்றிலும் ஆக்கிரமித்து விடுகின்றன. ஆகாயத்தாமரைகள் அதிகளவில் நீரை உறிஞ்சிவிடுவதால், விரைவிலேயே கண்மாய் வடு விடுகிறது.

விவசாய நிலங்களையும், சுற்றுவட்டாரப் பகுதியின் நிலத்தடி நீா்மட்டத்தையும் பெருமளவில் பாதிக்கிறது. இதனால் கண்மாயில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற விவசாயிகளும் சமூகநல ஆா்வலா்களும் மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com