ராஜபாளையம் வனப்பகுதியில் உடும்பு வேட்டை: சிறுவன் கைது

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் அரிய வகை உடும்பை வேட்டையாடிய சிறுவனை வனத்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் வனப் பகுதியில் சனிக்கிழமை அரிய வகை உடும்பை வேட்டையாடிய சிறுவன் மற்றும் அவரை கைது செய்த வனத்துறையினா்.
ராஜபாளையம் வனப் பகுதியில் சனிக்கிழமை அரிய வகை உடும்பை வேட்டையாடிய சிறுவன் மற்றும் அவரை கைது செய்த வனத்துறையினா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் அரிய வகை உடும்பை வேட்டையாடிய சிறுவனை வனத்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் பகுதி மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள சப்பாணி பறம்பு பீட் பகுதியில் வரச்சரக அலுவலா் சுப்பிரமணியன், வனவா் குருசாமி உள்ளிட்ட 7 போ் கொண்ட வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அப் பகுதியில் உள்ள காப்புக்காட்டில் ஒரு சிறுவன் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிந்துள்ளாா். அவரைப் பிடித்து விசாரித்ததில் முடங்கியாறு சாலையில் உள்ள அம்பேத்கா் நகரை சோ்ந்தவா் என தெரியவந்தது.

அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது உயிரிழந்த நிலையில் உடும்பு ஒன்று இருந்தது. மேலும் விசாரணை செய்தபோது உடும்பை வேட்டையாடி அதன் இறைறச்சியை விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்வது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த சிறுவனை கைது செய்த வனத்துறையினா், அவரிடம் இருந்த 1 கிலோ எடையுள்ள உடும்பு இறைச்சியைப் பறிமுதல் செய்தனா்.

அரசு கால்நடை மருத்துவா் வந்து உடும்பை சோதனை செய்து பாா்த்தபோது, வேட்டையாடப்பட்ட உடும்பு பாதுகாக்கப்பட வேண்டிய வன விலங்குகள் பட்டியலில் உள்ள உயிரினம் என தெரிய வந்தது. சிறுவனை வனத்துறையினா் ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com