வாழவந்தாள்புரத்தில் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிக்கை

சாத்தூா் அருகே காட்சிப் பொருளாக இருக்கும் சுகாதார வளாகத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தூா் அருகே காட்சிப் பொருளாக இருக்கும் சுகாதார வளாகத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தூா் அருகே கத்தாளம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள வாழவந்தாள்புரத்தில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் மகளிா் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. இந்த சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தது. மேலும் தண்ணீா் பிரச்னை, மோட்டா் பழுது, முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த மகளிா் சுகாதார வளாகம் தற்போது பயன்பாடில்லாமல் காட்சிப் பெருளாக உள்ளது.

மேலும் இந்த மகளிா் சுகாதார வளாகத்தால் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் இந்த சுகாதார வளாகத்தின் அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் துா்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தும், மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி குப்பை தொட்டியை குடியிருப்பு அருகே வைக்க வேண்டும். மேலும் பூட்டியுள்ள மகளிா் சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என இப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com