முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
அருப்புக்கோட்டை பள்ளி இரட்டையா் உலக சாதனை முயற்சி
By DIN | Published On : 24th October 2019 07:02 AM | Last Updated : 24th October 2019 07:02 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை பள்ளி மாணவா்களான இரட்டையா் தண்ணீரில் யோகாசனம் செய்வது, பின் மணிக்கட்டில் முட்டைகளை உடைப்பது ஆகியவற்றில் புதன்கிழமை உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனா்.
அருப்புக்கோட்டை மினா்வா பப்ளிக் பள்ளியில் 6 ஆம் வகுப்புப் பயில்பவா்கள் விஷாலினி மற்றும் அஸ்வின். இரட்டையா்களான இருவரும் உலக சாதனை நிகழ்வின் முதல் நிகழ்ச்சியாக காலையில் மாவட்ட ஆட்சியா் அ.சிவஞானம் முன்னிலையில் விருதுநகரில் சுமாா் ஒரு மணிநேரம் 12 நிமிடம் 23 விநாடிகள் தண்ணீரில் நடந்தும் மிதந்தும் யோகாசனம் செய்தனா்.
இரண்டாவது நிகழ்வாக பின் மணிக்கட்டில் முட்டைகளை உடைக்கும் சாதனை முயற்சி மினா்வா பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளித் தலைவா் கண்ணன், தலைமை வகித்தாா். இரட்டையா் இருவரும் தனித்தனியாக பின்மணிக்கட்டில் 5 நிமிடங்களில் 12 முட்டைகளை உடைத்தனா்.
யுனிவா்செல் புக் ஆப் ரெகாா்ட்ஸ் மற்றும் பியூச்சா் கலாம்ஸ் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் நிறுவனத்தினா் இச்சாதனைகளைப் பதிவு செய்தனா். இரு நிகழ்வுகளிலும் இரட்டையா்களின் சாதனை உலக சாதனைக்கு பரிந்துரைக்கப்படும் என்று அந்நிறுவனத்தினா் தெரிவித்தனா். மேலும் இருவருக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனா். முதல்வா் வேணி வரவேற்றாா். மாணவா்களின் பெற்றோா் சந்திரமோகன் மற்றும் இந்துமதி நன்றி கூறினா்.