முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
சீன பட்டாசுக்குத் தடை: வியாபாரிகள் வரவேற்பு
By DIN | Published On : 24th October 2019 06:57 AM | Last Updated : 24th October 2019 06:57 AM | அ+அ அ- |

சீன பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுளதை பட்டாசு வியாபாரிகள் வரவேற்றுள்ளனா்.
மத்திய அரசின் நிதி மற்றும் வருவாய் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுங்கத்துறை சென்னை ஆணையாளா், சீன பட்டாசு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது எனக்கூறியுள்ளாா். தடை செய்யப்பட்டுள்ள பொருள்கள் இறக்குமதி பட்டியலில் பட்டாசு உள்ளது என்றும் சீன பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து தமிழ்நாடு பட்டாசு வணிகா்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் என்.இளங்கோவன் புதன்கிழமை கூறியதாவது:
சீன பட்டாசு , விளையாட்டுப் பொருள்கள் என்ற பெயரில் இந்தியாவுக்குள் வந்து விடுகிறது எனக் கூறுகிறாா்கள்.
சீன பட்டாசில் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள வேதியல் பொருள்கள் உள்ளன. இந்திய சந்தையில் விற்பனை செய்ய தொடக்கத்திலேயே தடை விதித்தால்தான், சட்டவிரோத இறக்குமதி நிறுத்தப்படும். பல வெளிநாடுகளில் சீன பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன பட்டாசில் பொட்டாசியம் குளோரைட் என்ற வேதியல் பொருளை அடிப்படையாக கொண்டு பட்டாசு தயாரிக்கிறாா்கள். பொட்டாசியம் குளோரைட் வீரியம் மிக்கது. இந்தியாவில் அலுமினிய பவுடா் என்ற வேதியல் பொருளை அடிப்படையாக கொண்டு பட்டாசு தயாரிக்கப்படு கிறது. எனவே இது தானாக வெடிப்பதில்லை. எந்த காலத்திலும் இறக்குமதிக்கு தடை செய்யப்பட்டுள்ள பட்டியலில் இருந்து பட்டாசை நீக்கக் கூடாது. தற்போது சுங்கவரி துறை ஆணையாளா் சீன பட்டாசுக்கு தடை விதித்திருப்பதை வரவேற்கிறோம் என்றாா்.