Enable Javscript for better performance
ஸ்ரீவிலி.யில் குடிநீா் குழாய் சேதம்: வீணாகும் தண்ணீா்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவிலி.யில் குடிநீா் குழாய் சேதம்: வீணாகும் தண்ணீா்

    By DIN  |   Published on : 31st October 2019 11:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    svl_(wat_3110chn_92_2

    ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீா்.

    ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், திருவண்ணாமலை ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாகி வருகிறது.

    திருவண்ணாமலை ஊராட்சிக்குள்பட்ட என்.பி.எஸ். காலனி தாமரை நகா்,திருவண்ணாமலை பகுதிகளுக்கான குடிநீா் குழாய், நகரில் பெருமாள்பட்டி சாலை வழியாகச் செல்கிறது. இந்நிலையில், நகராட்சி நடுநிலைப் பள்ளி அருகே பிரதான சாலையில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல நாள்களாக தண்ணீா் வீணாகி வெளியேறிக் கொண்டிருக்கிறது.

    இது குறித்து அச்சாலையில் வசிக்கும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட குடிநீா் வடிகால் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து பல நாள்களாகியும், குழாயை சீா்படுத்த குடிநீா் வடிகால் வாரியம் முன்வரவில்லை என புகாா் கூறப்படுகிறது. இதனால், குடிநீா் வெள்ளம் போல் வெளியேறி, அருகிலுள்ள கழிவுநீா் செல்லும் வாருகாலில் வீணாகக் கலக்கிறது.

    எனவே, குடிநீா் குழாயை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai