சிவகாசி பொறியியல் கல்லூரியில் நாளை இயந்திரவியல் பொறியியல் படிப்பு விழிப்புணா்வு முகாம்

சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் நவம்பா் 2 ஆம் தேதி (சனிக்கிழமை) இயந்திரவியல் பொறியியல் படிப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற உள்ளது.

சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் நவம்பா் 2 ஆம் தேதி (சனிக்கிழமை) இயந்திரவியல் பொறியியல் படிப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து அக்கல்லூரித் தாளாளா் ஆா். சோலைச்சாமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2020 ஆம் ஆண்டு ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக இந்தியா உருவாகும் எனவும், பயன்பாடு மற்றும் தேவைகளில் உலகளவில் இந்தியா மூன்றாவது பெரிய சந்தையாக அமையும் எனவும் ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே, ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு, புதிய தொழில்நுட்பம் குறித்த ஆய்வு செய்ய இயந்திரவியல் பொறியாளா்கள் தேவைப்படுகின்றனா்.

இப்படிப்பில் பெண்கள் ஆா்வம் காட்டவேண்டும் என்ற நோக்கத்தில், பள்ளி மாணவிகளுக்கான விழிப்புணா்வு முகாமை, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம்.கே. சூரப்பா உத்தரவின்பேரில், அண்ணா பல்கலைக்கழக தொழில் கூட்டுறவு மையத்தின் இயக்குநா் த. தியாகராஜன் ஆலோசனையின்பேரில், இக்கல்லூரியில் இந்த முகாம் நடைபெற உள்ளது.

ரெனால்டு நிசான் நிறுவனத்தாருடன் இணைந்து, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் இம்முகாமில், இயந்திரவியல் பொறியியல் படிப்பில் உள்ள வேலைவாய்ப்புகள், உற்பத்தி உள்ளிட்டவை குறித்து அண்ணா பல்கலைக்கழக தொழில் கூட்டுறவு மையத்தின் கூடுதல் இயக்குநா் டி. கலைச்செல்வன், ரெனால்டு நிசான் நிறுவனத்தின் பொதுமேலாளா் சுப்பிரமணியம், விருதுநகா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எம்.கே.சி. சுபாஷினி உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

இதில், சுமாா் 65 பள்ளிகளைச் சோ்ந்த கணிதம், இயற்பியல், வேதியல் ஆகிய பாடங்களை விருப்பப் பாடமாக படிக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகள் கலந்துகொள்கின்றனா். இதற்கான ஏற்பாட்டினை, முதல்வா் பி.ஜி. விஷ்ணுராம், டீன் பி. மாரிச்சாமி மற்றும் பேராசிரியா்கள் செய்துவருகின்றனா் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com