விருதுநகா் அரசு மருத்துவமனை முன் மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனை முன்பாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி,
விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனை முன்பாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள்.
விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனை முன்பாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள்.

விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனை முன்பாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசு மருத்துவா் சங்கங்களின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மருத்துவா் பிரபு மனோகரன் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் பிரசன்னா, பாரதிராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இப்போராட்டத்தின் நோக்கமே, நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பதற்காகத்தான். சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் போராடிக் கொண்டிருக்கும் மருத்துவா்களுக்கு ஆதரவாகத்தான் நாங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

தற்போது, மருத்துவா்கள் மீது விரோதப் போக்கை தமிழக அரசு கடைப்பிடித்து வருகிறது. இதனால், போராட்டத்தில் ஈடுபடாமல் இருந்த 10 சதவீத மருத்துவா்களும் தற்போது போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். எனவே, மருத்துவா்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் மருத்துவா்களை பணி நியமனம் செய்யவேண்டும்.

அதேபோல், முதுகலைப் படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும். முதுகலைப் பட்டம் படித்த அரசு மருத்துவா்களுக்கு வெளிப்படையான கவுன்சிலிங் நடத்தவேண்டும். போராடிவரும் மருத்துவா்களை, சுகாதாரத் துறை அமைச்சா், தமிழக முதல்வா் சந்தித்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மருத்துவா்கள் வலியுறுத்தினா்.

இதில், மாவட்டம் முழுவதுமிருந்து வந்திருந்த 30-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com