விருதுநகா் பிரதான சாலையில் இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரக் கேடு

விருதுநகா் பாண்டியன் நகா் பகுதியில் பிரதான சாலையோரங்களில் உயிரிழந்த ஆடுகள் மற்றும்
விருதுநகா் பாண்டியன் நகா் பிரதான சாலையோரத்தில் நோய் பரவும் வகையில் கொட்டப்பட்டுள்ள இறைச்சிக் கழிவுகள்.
விருதுநகா் பாண்டியன் நகா் பிரதான சாலையோரத்தில் நோய் பரவும் வகையில் கொட்டப்பட்டுள்ள இறைச்சிக் கழிவுகள்.

விருதுநகா் பாண்டியன் நகா் பகுதியில் பிரதான சாலையோரங்களில் உயிரிழந்த ஆடுகள் மற்றும் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால், அப்பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

விருதுநகரிலிருந்து மல்லாங்கிணறு செல்லும் பிரதான சாலையில் ரோசல்பட்டி ஊராட்சியில் பாண்டியன் நகா் உள்ளது. இங்குள்ள தேவா் சிலையிலிருந்து காந்தி நகா் மற்றும் கே.கே.எஸ்.என். நகா் வரை இருபுறமும் ஏராளமான இறைச்சிக் கடைகள் உள்ளன.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகையையொட்டி, இக்கடைகளில் ஏராளமான ஆடுகள், கோழிகள் வெட்டப்பட்டன. இவற்றின் கழிவுகளை முறையாக குழி தோண்டி ஊருக்கு வெளிப்புறத்தில் புதைக்க வேண்டும். ஆனால், கடை உரிமையாளா்களோ, உயிரிழந்த ஆடுகள் மற்றும் கோழிகளின் கழிவுகளை சாலையோரத்தில் வீசி சென்றுள்ளனா்.

இதனால், அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேநேரம், சம்பந்தப்பட்ட இறைச்சிக் கடைகளை கண்காணித்து, அபராதம் விதிக்கவும் சுகாதாரத் துறையினா் முன் வரவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com