சுடச்சுட

  

  அருப்புக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

  By DIN  |   Published on : 13th September 2019 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள  ஸ்ரீசெளடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.இ தில் 74 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
  முகாமுக்கு ஸ்ரீசெளடாம்பிகா பொறியியல் கல்லூரி முதல்வர் சந்திரா தலைமை வகித்துப் பேசியது: மாணவர்கள் எந்தத் துறையில் வேலைவாய்ப்பைப் பெற விரும்புகிறீர்களோ, அந்த துறை சார்ந்த திறமைகளை கட்டாயம் வளர்த்துக் கொள்ளவேண்டும். தற்காலத் தேவைக்கேற்ற வகையிலான கூடுதல் பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டு வேலை கிடைத்த பின்னர், அவ்வேலையில் முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்பட்டால் வாழ்வில் மேன்மேலும் உயர்ந்து சாதனை புரியலாம் என்றார்.
  இம்முகாமில் சென்னை அப்பாசாமி அசோசியேட்ஸ் நிறுவனத்தின் மனிதவள அதிகாரிகள் கலந்து கொண்டு நேர்காணல் தேர்வை நடத்தினர். மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஸ்ரீசெளடாம்பிகா பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீசெளடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறைகளைச் சேர்ந்த சுமார் 300-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 74 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
  ஏற்பாடுகளை பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் சுந்தரமகாலிங்கம் மற்றும் அனைத்துத் துறைத் தலைவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai