சுடச்சுட

    

    சிவகாசி கல்லூரியில் பேராசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

    By DIN  |   Published on : 13th September 2019 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
    பயிற்சிக்கு முதல்வர்(பொறுப்பு) ஆர். ஜெகநாதன் தலைமை வகித்தார். இதில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.திருமலை பேசியதாவது: ஆசிரியர்கள், மாணவர்கள் உறவு எந்தவித விரிசலும் இல்லாமல் சிறப்பாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களிடமும் தனிப்பட்ட முறையில் அக்கறை காட்ட வேண்டும். வகுப்பறையில் மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்க தூண்ட வேண்டும். மாணவர்களின் நடவடிக்கையை கவனித்து செயல்பட வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை  கொடுக்க வேண்டும். ஆசிரியர்களும் மாணவன் தானே என அலட்சியம் காட்டக்கூடாது.
    பேராசிரியர்கள் வகுப்பறைக்கு செல்லும் முன்னர், அன்று நடத்த வேண்டிய பாடங்களையும், தற்போது வந்துள்ள தொழில்நுட்பங்களையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். சிறிய செயலுக்கும் பாராட்ட வேண்டும். மாணவர்களின் வாழ்க்கைக்கு பேராசிரியர்கள் ஒளி விளக்காக இருக்க வேண்டும் என்றார். முன்னதாக பேராசிரியர்கள் ந.செந்தில்குமார் வரவேற்றார்.  கி.சுந்தரம் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai