Enable Javscript for better performance
அருப்புக்கோட்டையில்  "ஜாக்டோ-ஜியோ' ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அருப்புக்கோட்டையில்  "ஜாக்டோ-ஜியோ' ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 14th September 2019 05:43 AM  |   அ+அ அ-   |    |  

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் "ஜாக்டோ-ஜியோ' சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    அருப்புக்கோட்டை ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரர் கோயில் அருகே "ஜாக்டோ ஜியோ' சார்பில் 5 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கூட்டமைப்பு சார்பில் அதன் மாவட்ட இணைச்செயலாளர் செல்வி தலைமை வகித்தார். 
     பின்னர் பேரணியாக புறப்பட்டு அங்கிருந்து அண்ணாசிலை, காய்கறிச் சந்தை, அகமுடையர் மகால், பந்தல்குடி சாலை வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை  சென்றனர். அங்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    kattana sevai