Enable Javscript for better performance
"துப்புரவுத் தொழிலாளர்கள் கையுறைகளை அணிந்து பணியாற்ற வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    "துப்புரவுத் தொழிலாளர்கள் கையுறைகளை அணிந்து பணியாற்ற வேண்டும்'

    By DIN  |   Published on : 14th September 2019 05:36 AM  |   அ+அ அ-   |    |  

    துப்புரவுப் பணியாளர்கள் கையுறை மற்றும் காலுறை அணிந்து பணி புரிய வேண்டும் என விருதுநகரில் நடைபெற்ற பயிற்சி முகாமில் நகர் நல அலுவலர் இந்திரா தெரிவித்தார்.
    விருதுநகர் தனியார் உணவக அறையில் துப்புரவு மேலாண்மை பணிகள் குறித்து துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அருப்புக்கோட்டை, விருதுநகர் நகராட்சியில் பணி புரியும் தலா 30 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 
    இந்நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நகர் நல அலுவலர் இந்திரா கலந்து கொண்டு பேசியது:  
    வீடுகள், கடைகள் மற்றும் பெரிய நிறுவனங்களில் சேர்ந்துள்ள குப்பைகளை துப்புரவுப் பணியாளர்கள் வாங்கி வருகின்றனர். அப்போது, அதிலுள்ள கழிவுப் பொருள்கள், நோய் தன்மை ஏற்படுத்த கூடியவையாக இருக்கும். இதனால், துப்புரவுப் பணியாளர்கள் கண்டிப்பாக கையுறை, காலுறை அணிய வேண்டும். மேலும், உணவு பொருள்கள் உண்பதற்கு முன் கை, கால்களை சோப்பு மூலம் கழுவ வேண்டும்.  தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும் என்றார். 
    அதன் பின்னர், விருதுநகர் நகராட்சி உதவி பொறியாளர் பாலாஜி, சுகாதார ஆய்வாளர் குருசாமி ஆகியோர் துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் முறை குறித்து எடுத்துக் கூறினர்.  இதில், துப்புரவு மேற்பார்வையாளர்கள் உள்பட நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
     

    kattana sevai