Enable Javscript for better performance
பேரனை கொலை செய்ய முயற்சி: பாட்டி உள்பட 2 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    பேரனை கொலை செய்ய முயற்சி: பாட்டி உள்பட 2 பேர் மீது வழக்கு

    By DIN  |   Published on : 14th September 2019 05:42 AM  |   அ+அ அ-   |    |  

    விருதுநகர் அருகே பேரனைக் கொலை செய்ய முயற்சித்ததாக அவரது பாட்டி, தாய் மாமன் ஆகியோர் மீது போலீ-ர் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
    விருதுநகர் அருகே உள்ள தவசிலிங்காபுரத்தை சேர்ந்தவர் முத்தையா (75). இவரது மகள் பூமாலை தனது கணவர் உயிரிழந்து விட்டதால், கடந்த 15 ஆண்டுகளாக தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார். 
    இந்நிலையில் முத்தையாவின் மனைவி மாரியம்மாள், மகன் முருகேசன் ஆகியோர் தனது குடும்ப சொத்துக்களை பூமாலையும் அவரது மகன் பாண்டியராஜ் ஆகியோர் அபகரித்து வருவதாக அடிக்கடி தகராறு செய்து வந்தனராம். 
    இந்நிலையில், பாண்டியராஜ் வெள்ளிக்கிழமை வீட்டருகே நின்று கொண்டிருந்த போது, அவரை கொலை செய்யுமாறு தனது மகனிடம் மாரியம்மாள் தெரிவித்தாராம். அப்போது, அரிவாளால் பாண்டியராஜனை, தாய் மாமன் முருகேசன் வெட்ட முயன்றுள்ளார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தி, அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும்,  பாண்டியராஜை கொலை செய்யாமல் விட மாட்டேன் என முருகேசன் தெரிவித்தாராம்.
     இதுகுறித்து முத்தையா அளித்தப் புகாரின் பேரில்  பேரனைக் கொலை செய்ய முயன்றதாக
    பாட்டி  மாரியம்மாள்,  தாய் மாமன் முருகேசன் ஆகியோர் மீது ஆமத்தூர் போலீ-ர்  வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். 

    kattana sevai