சிவகாசி வேலைவாய்ப்பு முகாமில் 632 பேருக்கு பணி  நியமன ஆணை

சிவகாசியில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 632  பேருக்கு பணி நியமன ஆணைகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

சிவகாசியில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 632  பேருக்கு பணி நியமன ஆணைகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.
 மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகம், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டி மையம் ஆகியவை இணைந்து எஸ்.ஹெச்.என்.வி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாமினை நடத்தின. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமை வகித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன.  எட்டாம் வகுப்பு முதல், பட்டப்படிப்பு, ஐ.டி., பட்டயப்படிப்பு , பொறியியல் பட்டதாரிகள், செவிலியர் படிப்பு படித்தவர்கள் உள்ளிட்ட 2,512 பேர் இந்த முகாமில் கலந்து கொண்டனர். இதில் 632 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். 
வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். அப்போது அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
  இதன்மூலம் படித்த இளைஞர்கள் செலவு இல்லாமல் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். படித்தவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெற்று, வாழ்க்கையில் உயர வேண்டும் என்பதே அரசின் விருப்பமாகும்.
ஒரு இளைஞர் வேலைவாய்ப்பு பெறும் போது, வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவதோடு, பயனும் பெறுகிறார்கள். 
 வேலைவாய்ப்பு பெற்றவர்கள் ஆர்வத்துடனும், துடிப்புடனும் வேலை பார்த்து முன்னேற வேண்டும் என்றார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமனாதன் வரவேற்றார். சாத்தூர் எம்.எல்.ஏ.ராஜவர்மன், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயக்குமார், சிவகாசி கோட்டாட்சியர் தினகரன், வட்டாட்சியர் ரெங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com