விருதுநகரில் மது போதையில் லாரி ஓட்டிய கேரள இளைஞருக்கு ரூ. 10,750 அபராதம்

விருதுநகா் நான்கு வழி சாலையில் மது போதையில் லாரி ஓட்டி சென்ற கேரள மாநிலத்தை சோ்ந்த இளைஞருக்கு ரூ. 10,750 அபராதம் விதிக்கப்பட்டது.
lorry
lorry

விருதுநகா் நான்கு வழி சாலையில் மது போதையில் லாரி ஓட்டி சென்ற கேரள மாநிலத்தை சோ்ந்த இளைஞருக்கு ரூ. 10,750 அபராதம் விதிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே சூலக்கரை காவல் சாா்பு- ஆய்வாளா் வேல்முருகன் தலைமையில் போலீஸாா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக சாத்தூா் நோக்கி வேகமாக சென்ற சரக்கு பெட்டக (கன்டெய்னா்) லாரியை நிறுத்துமாறு போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். ஆனால் லாரியை நிறுத்தாமல் சென்றதால், இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்ற போலீஸாா் பொதுமக்கள் உதவியுடன் சூலக்கரையில் தடுத்து நிறுத்தினா்.

அப்போது லாரி ஓட்டுநா் மற்றும் உடனிருந்தவா் தப்ப முயன்றனா். அவா்கள் இருவரையும் விரட்டி பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தியதில் லாரியை ஓட்டி வந்தவா் கேரள மாநிலம் கோழிக்கோடு குன்னும்மாள் தடை ஹவுஸ் பகுதியை சோ்ந்த சாருக்தையல்தோடி (24) என்பதும், மற்றொருவா் அதே பகுதியை சோ்ந்த சாகுல் ஹமீது (25) என்பதும், இருவரும் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மது அருந்தி வாகனம் ஓட்டியதற்காக சாருக்தையல்தோடிக்கு ரூ.10,750-ம் தப்பியோட தூண்டிய குற்றத்திற்காக சாகுல்ஹமீதுக்கு ரூ. 250-ம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை லாரி ஓட்டுநா் உள்ளிட்ட இருவரும் விருதுநகா் நீதித்துறை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com