Enable Javscript for better performance
பந்தல்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    பந்தல்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகள் திருட்டு

    By DIN  |   Published on : 25th September 2019 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திங்கள்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகள், மடிக்கணினி உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    பந்தல்குடி குமரன் நகரைச் சேர்ந்தவர்கள் முத்துராஜ் - சாந்தி தம்பதி. இத்தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர்கள் பொறியியல் பட்டப்படிப்புப் படித்து வருகின்றனர். முத்துராஜ் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் சாந்தி தனது இரு பிள்ளைகளுடன் பந்தல்குடி குமரன் நகரில் வசித்து வருகிறார். 
    இந்நிலையில் திங்கள்கிழமை நண்பகலில் சாந்தி தனது வீட்டைப் பூட்டி விட்டு பந்தல்குடியிலுள்ள ஒரு தனியார் நகை அடகு கடைக்குச் சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு  திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டினுள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 18 பவுன் நகைகள், மடிக்கணினி உள்ளிட்டவைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. 
    இதுகுறித்து பந்தல்குடி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai