Enable Javscript for better performance
விருதுநகரில் மது போதையில் லாரி ஓட்டிய கேரள இளைஞருக்கு ரூ. 10,750 அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகரில் மது போதையில் லாரி ஓட்டிய கேரள இளைஞருக்கு ரூ. 10,750 அபராதம்

    By DIN  |   Published on : 25th September 2019 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் நான்கு வழிச் சாலையில் மது போதையில் லாரி ஓட்டி சென்ற கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞருக்கு ரூ. 10,750 அபராதம் விதிக்கப்பட்டது.
    விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே சூலக்கரை காவல் சார்பு- ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் போலீஸார் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சாத்தூர் நோக்கி வேகமாக சென்ற சரக்கு பெட்டக (கன்டெய்னர்) லாரியை நிறுத்துமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் லாரியை நிறுத்தாமல் சென்றதால், இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்ற போலீஸார் பொதுமக்கள் உதவியுடன் சூலக்கரையில் தடுத்து நிறுத்தினர். அப்போது லாரி ஓட்டுநர் மற்றும் உடனிருந்தவர் தப்ப முயன்றனர். அவர்கள் இருவரையும் விரட்டி பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் லாரியை ஓட்டி வந்தவர் கேரள மாநிலம் கோழிக்கோடு குன்னும்மாள் தடை ஹவுஸ் பகுதியை சேர்ந்த சாருக்தையல்தோடி (24) என்பதும், மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது (25) என்பதும், இருவரும் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மது அருந்தி வாகனம் ஓட்டியதற்காக சாருக்தையல்தோடிக்கு ரூ.10,750-ம் தப்பியோட தூண்டிய குற்றத்திற்காக சாகுல்ஹமீதுக்கு ரூ. 250-ம் அபராதம் விதிக்கப்பட்டது.
     இந்த அபராதத் தொகையை லாரி ஓட்டுநர் உள்ளிட்ட இருவரும் விருதுநகர்  நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை செலுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai