Enable Javscript for better performance
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரயிலில் அடிபட்டு இளைஞர் பலி- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரயிலில் அடிபட்டு இளைஞர் பலி

    By DIN  |   Published on : 25th September 2019 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நூர்சாகிபுரத்தில் செவ்வாய்க்கிழமை ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழந்தார்.
    விருதுநகர் மாவட்டம் சிவகாசி இ.எஸ்.ஐ. காலனி அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி - பேச்சியம்மாள் தம்பதியின் மகன் அசோக் (26). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இவர் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அழகு தெய்வேந்திரபுரத்தில் உள்ள தனது அக்கா வீட்டில் இருந்து வந்துள்ளார். 
    இந்நிலையில், நூர்சாகிபுரம் ரயில்வே சுரங்கப்பாதைக்கு அருகே ரயிலில் அடிபட்டு பலத்த காயங்களுடன் இளைஞர் உயிரிழந்து கிடப்பதாக ஸ்ரீவில்லிப்புத்தூர் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அங்கு சென்ற ரயில்வே போலீஸார், உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் மனநலம் பாதிக்கப்பட்ட அசோக் என்பது தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai