Enable Javscript for better performance
அருப்புக்கோட்டை சீரடி சாய்பாபா கோயிலில் தமிழிசை செளந்தரராஜன் சுவாமி தரிசனம்- Dinamani

சுடச்சுட

    

    அருப்புக்கோட்டை சீரடி சாய்பாபா கோயிலில் தமிழிசை செளந்தரராஜன் சுவாமி தரிசனம்

    By DIN  |   Published on : 29th September 2019 07:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tamilisai

    அருப்புக்கோட்டை காந்திநகரில் உள்ள சீரடிசாய்பாபா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபட்ட தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்.

    விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

    மதுரை-தூத்துத்துடி நான்குவழிச் சாலையில் அருப்புக்கோட்டை காந்தி நகரில் உள்ளது சீரடி சாய்பாபா கோயில். இக்கோயில் அறறங்காவலராக பிரபல அருப்புக்கோட்டை தொழிலதிபா் டி.ஆா்.வரதராஜன் உள்ளாா். இவரது துணைவியாா் ஷெண்பகவல்லியும், தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனும் நெருக்கமான தோழிகள் எனக் கூறறப்படுகிறது.

    இந்நிலையில் திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு தமிழிசை செளந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றாா்.

    மதுரை செல்லும் வழியில் அருப்புக்கோட்டையில் உள்ள இக் கோயிலில் தனது தோழியானஷெண்பகவல்லியுடன் வந்து தமிழிசை செளந்தரராஜன் வழிபாடு நடத்தினாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் சிறறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai