Enable Javscript for better performance
ஸ்ரீவிலி. அருகே ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலி; 3 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவிலி. அருகே ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலி; 3 பேர் காயம்

    By DIN  |   Published on : 29th September 2019 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


     ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோயில் பகுதியில் சனிக்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர்  காயமடைந்தனர்.
     விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயிலுக்கு சனிக்கிழமை ஏராளமான பக்தர்கள் சென்று வந்தனர். 
    இந்த நிலையில், சுவாமி தரிசனம் செய்து விட்டு குன்னூரைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் ஆட்டோவில் ஊருக்குச் சென்றுகொண்டிருந்தனர். வெங்கடேஷன் ஆட்டோவை ஒட்டினார். 
    கிருஷ்ணன்கோவில் பேருந்து நிறுத்தம் அருகே ஆட்டோ வந்த போது, நாய் குறுக்கே புகுந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், குன்னூரை சேர்ந்த பிரகாஷ் மகன் சிவசுப்பிரமணியன் (41) சம்பவ இடத்தில்  உயிரிழந்தார். மேலும், மூன்று பேர் காயமடைந்தனர். அவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
     இது குறித்து கிருஷ்ணன் கோவில் போலீஸார், வழக்குப்பதிந்து ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai