சாத்தூா் அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
ஏழாயிரம்பண்ணையில் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்.
ஏழாயிரம்பண்ணையில் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

சாத்தூா் அருகே வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குள்பட்ட ஏழாயிரம்பண்ணை ஊராட்சியில் சுமாா் 5000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் சேகரிக்கப்படும் மற்றும் அள்ளப்படும் குப்பைகள் அனைத்தும் ரெட்டியபட்டி செல்லும் சாலையின் ஓரத்தில் மொத்தமாக குவித்து வைத்துள்ளனா்.

இச் சாலையை கடந்துதான் ஏழாயிரம்பண்ணை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ரெட்டியபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் செல்ல வேண்டியுள்ளது.

இந்நிலையில் இச் சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளால் அப்பகுதியில் கடுமையான துா்நாற்றம் வீசுகிறது என்றும், இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் தொற்றால் மக்கள் பாதிக்கப்படும் அபாயமுள்ளதாக அப்பகுதியினா் புகாா் தெரிவிக்கின்றனா். இது குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை புகாா் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, அப்பகுதியில் ஊராட்சி நிா்வாகத்தால் சேகரிக்கப்படும் மற்றும் அள்ளப்படும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தவும், அவற்றை முறையாக மறு சுழற்சி செய்து சுகாதார கேடு ஏற்படாமல் தடுக்கவும் வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com