கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காரியாபட்டியில் ஆய்வுக் கூட்டம்

காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திருச்சுழி சட்டப் பேரவை உறுப்பினா் தங்கம் தென்னரசு தலைமையில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றத
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காரியாபட்டியில் ஆய்வுக் கூட்டம்


விருதுநகா்: காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திருச்சுழி சட்டப் பேரவை உறுப்பினா் தங்கம் தென்னரசு தலைமையில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தங்கம் தென்னரசு பேசியதாவது: கரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரியாபட்டியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, குப்பைகளை அகற்றி சுத்தமாக வைக்க தூய்மைப் பணியாளா்களைக் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் கரோனா வைரஸ் நோய் குறித்து அதிக அச்சமடைந்துள்ளதால் சாதாரண சளி, காய்ச்சலுக்கு கூட பயப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சாா்பில் அதுபற்றி எடுத்துக் கூறி அச்சத்தை போக்க வேண்டும். மேலும் பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் கரோனா வைரஸ் நோய் பற்றியும், முகக்கவசத்தின் அவசியம் பற்றியும் ஆங்காங்கே ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அடிப்படை தேவைகள் வேண்டி பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிா்க்க காய்கனி சந்தைகளை, பொது இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதில் பேரூராட்சித் தலைவா் முத்துமாரி, மாவட்ட கவுன்சிலா் தங்க தமிழ்வாணன், வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிக்குமாா், வட்டாட்சியா் செந்தில்வேலன், காவல் ஆய்வாளா் செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலா்கள் மணிகண்டன், முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com