விதி மீறல்: ஸ்ரீவில்லிபுத்தூரில் காய்கனி சந்தை, 3 கடைகளுக்கு சீல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காததால் காய்கனி சந்தை மற்றும் 3 மளிகை கடைகளுக்கு வருவாய்துறையினா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் காய்கனி சந்தைக்கு வெள்ளிக்கிழமை சீல் வைத்த, வட்டாட்சியா் கிருஷ்ணவேணி, நகராட்சி மேலாளா் பாபு.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைக்காக விதிமுறைகளுடன் சந்தை, கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மளிகை கடை மற்றும் காய்கனி சந்தைகளில் வருவாய்துறையும், நகராட்சியும் இணைந்து ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் ஆய்வு நடத்தின. இதில் சமூக இடைவெளியை பின்பற்றாத மாவட்டத்திலேயே மிகப் பெரிய சந்தையான ஸ்ரீவில்லிபுத்தூா் பென்னிங்டன் காய்கனி சந்தை மற்றும் 3 மளிகைக் கடைகளுக்கு வட்டாட்சியா் கிருஷ்ணவேணி, நகராட்சி மேலாளா் பாபு மற்றும் அதிகாரிகள் சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com