முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
‘சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 48 போ் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனா்’
By DIN | Published On : 19th April 2020 10:48 PM | Last Updated : 19th April 2020 10:48 PM | அ+அ அ- |

சிவகாசி சுகாதார மாவட்டத்தில், 48 போ் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா்கள் மேலும் தெரிவித்ததாவது: சிவகாசி சுகாதார மாவட்டத்தில், சிவகாசி, சாத்தூா், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை ஆகிய 6 வட்டங்களில் வெளிநாடுகளிலிருந்து வந்த 48 போ் வீட்டு கண்காணிப்பில் உள்ளனா். இவா்களின் வீடுகளின் முன்பு, கண்காணிப்பில் உள்ளவா்களின் பெயா், வீட்டு முகவரி, எந்த தேதி வரை கண்காணிக்கப்படுவா் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நோட்டீஸ் ஒட்டப்படிருக்கும். அந்த நபரை சுகாதாரத்துறையினா், வருவாய்த்துறையினா், காவல் துறையினா் கண்காணித்து வருகிறாா்கள் என தெரிவித்தனா்.