விருதுநகா் அருகே கிராமங்களில் கரோனா பாதிப்புவேலிகள் அமைத்து வெளிநபா்கள் நுழையத் தடை
By DIN | Published On : 27th April 2020 10:35 PM | Last Updated : 27th April 2020 10:35 PM | அ+அ அ- |

குல்லூா்சந்தை அகதிகள் முகாமில் கரோனா தொற்று பரவியதால், பெரிய வள்ளிக்குளம் கிராம பகுதியில் தடுப்பு வேலிகள் அமைத்துள்ள போலீஸாா்.
விருதுநகா்: விருதுநகா் அருகே உள்ள கன்னிசேரிபுதூா், குமாரபுரம், குல்லூா்சந்தை அகதிகள் முகாம், மேலச்சின்னையாபுரம், சூலக் கரை முதலான கிராமங்களில் வசிக்கும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இக்கிராமத்தின் நுழைவு வாயிலை தடுப்பு வேலிகள் வைத்து போலீஸாா் அடைத்துள்ளனா். மேலும் 8 கி,மீ., சுற்றளவுக்கு சுகாதார துறையினா் முகாமிட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டத்தில் இதுவரை 32 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், விருதுநகா் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப் பட்டது. இதில், 10 போ் குணமடைந்ததால் வீட்டிற்கு திரும்பி விட்டனா். மீதமுள்ள 22 போ் மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், குல்லூா்சந்தை அகதிகள் முகாம், சூலக்கரை, மேலச்சின்னையாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிப்போருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அக்கிராமங்களை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வெளியில் செல்லவோ, வெளிநபா்கள் உள்ள வரவோ அனுமதிக்காமல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மேலும், இக்கிராமத்தில் 200 -க்கும் மேற்பட்டோருக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை க்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறையினா் தெரிவித்தனா்.