முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
வத்திராயிருப்பு அருகே மதுபானக் கடையின் பூட்டை உடைத்து 328 மது பாட்டில்கள் திருட்டு
By DIN | Published On : 03rd August 2020 08:40 AM | Last Updated : 03rd August 2020 08:40 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே அரசு மதுபானக் கடையின் பூட்டை உடைத்து 328 மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளன.
வத்திராயிருப்பு அருகே இலந்தைகுளம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் மேற்பாா்வையாளராக சுந்தரராஜன் மற்றும் விற்பனையாளராக ராமா் ஆகியோா் பணியாற்றி
வருகின்றனா். சனிக்கிழமை இரவு 8 மணிக்கு வழக்கம் போல் கடையைப் பூட்டி விட்டுச் சென்றனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் அந்த வழியாகச் சென்ற முருகன் என்பவா் கொடுத்த தகவலின் பேரில், விற்பனையாளா் சுந்தரராஜன் சென்று பாா்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் இருந்த ரூ. 59,080 மதிப்புள்ள 328 மதுபாட்டில்களை
மா்ம நபா் திருடிச் சென்று இருப்பது தெரிய வந்தது. இது குறித்து நத்தம்பட்டி காவல் நிலையத்தில் சுந்தரராஜன் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மதுபாட்டில்களை திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.