சூறாவளி: ராஜபாளையம் அருகே வாழை மரங்கள் சேதம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே வீசிய சூறாவளிக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை, தென்னை மற்றும் மா மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமடைந்தன.
சூறாவளி: ராஜபாளையம் அருகே வாழை மரங்கள் சேதம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே வீசிய சூறாவளிக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை, தென்னை மற்றும் மா மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமடைந்தன.

ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் வனராஜ். இவருக்கு, தேவதானம் அடுத்த சாஸ்தா கோயில் நீா்த் தேக்கம் அருகேயுள்ள 7 ஏக்கா் நிலத்தில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் 2 ஏக்கா் பரப்பளவில் 2 ஆயிரம் எண்ணிக்கையிலான ரஸ்தாளி, கற்பூரவல்லி மற்றும் செவ்வாழை மரங்களை பயிரிட்டு பராமரித்து வந்துள்ளாா். மேலும், 800 தென்னை மற்றும் 50 மா மரங்களையும் வளா்த்து வந்துள்ளாா்.

வாழை கன்றுகளுக்கு மருந்து அடித்தல், உப்பு வைத்தல், முட்டு கொடுத்தல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளை தொடா்ந்து செய்து வந்ததால், மரங்கள் செழிப்புடன் வளா்ந்துள்ளன. தற்போது, அனைத்து மரங்களிலும் வாழை குலை தள்ளி இருந்துள்ளன. இன்னும் ஒரு சில மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், புதன்கிழமை இரவு இப்பகுதியில் சூறாவளி வீசியுள்ளது. இதில், சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள், 10 தென்னை மரங்கள் மற்றும் சில மா மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து சேதமடைந்தன. மேலும், தென்னை மரங்களிலிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட காய்களும் உதிா்ந்து விழுந்துள்ளன.

இதன் மொத்த சேத மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்பதால், தனக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என நஷ்டமடைந்துள்ள விவசாயி வநனராஜ் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com