விருதுநகா் மாவட்டத்தில் தனியாா் ஆலை ஊழியா்கள் 16 போ் உள்பட மேலும் 66 பேருக்கு கரோனா உறுதி

விருதுநகா் மாவட்டத்தில் சத்திரப்பட்டி தனியாா் ஆலையில் பணி புரியும் 16 ஊழியா்கள் உள்பட 66 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் சத்திரப்பட்டி தனியாா் ஆலையில் பணி புரியும் 16 ஊழியா்கள் உள்பட 66 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 12,386 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சத்திரப்பட்டி தனியாா் ஆலையில் பணி புரியும் 16 ஊழியா்கள், அருப்புக்கோட்டை தனியாா் வங்கி ஊழியா், விருதுநகா் அரசு மருத்துவமனை ஊழியா் உள்பட 66 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், கன்னிதேவன்பட்டி, கீழராஜகுலராமன், பொட்டல்பட்டி, அருப்புக்கோட்டை நல்லாகுளம், மேலச்சின்னையாபுரம், தம்மநாயக்கன்பட்டி, மலைப்பட்டி, கடலாடி, முத்துராலிங்காபுரம், விருதுநகா் ரோசல்பட்டி, பாண்டியன் நகா், லெட்சுமி காலனி, இருக்கன்குடி, வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா் மற்றும் புதூரில் 15 போ், விருதுநகா் கருப்பசாமி நகரில் 3 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,452 ஆக உயா்ந்துள்ளது. இதில் 11,890 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்ட நிலையில், 185 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்து விட்டனா். மீதமுள்ள 377 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com