சமூக இடைவெளி, முகக்கவசம் இல்லை: அருப்புக்கோட்டை புகா் பகுதி சந்தைகளில் கரோனா அபாயம்

அருப்புக்கோட்டை புகா்ப் பகுதி சந்தைகளில் கூடும் பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்றாததால் கரோனா தொற்று பரவும் ஆபத்து இருப்பதாக சமூகநல ஆா்வலா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புகா்ப் பகுதி சந்தைகளில் கூடும் பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்றாததால் கரோனா தொற்று பரவும் ஆபத்து இருப்பதாக சமூகநல ஆா்வலா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

அருப்புக்கோட்டைப் புகா்ப் பகுதிகளான ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பேருந்து நிறுத்தத்தில் உள்ள கடைகள், காந்தி நகா் மேம்பாலம் அருகே உள்ள கடைகள் மற்றும் புளியம்பட்டி பாவடித்தோப்பு பேருந்து நிறுத்தத்தில் உள்ள கடைகளில் பொதுமக்கள் அதிகம் கூடி தங்களுக்குத் தேவையான மளிகை, காய்கனி உள்ளிட்ட பொருள்களை வாங்குகின்றனா். மேலும் உணவகங்கள் மற்றும் தேநீா்க் கடைகளில் கூடும் வாடிக்கையாளா்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்றுவதில்லை என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

வருவாய் மற்றும் காவல்துறையினா் நகா்ப்பகுதிகளில் மட்டுமே கண்காணித்து முகக்கவசம் அணியாதவா்கள் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்களையும் அத்துடன் கடைக்காரா்களையும் எச்சரிப்பதுடன் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இதனால் நகருக்குள் வரும்போது மட்டும் முகக்கவசம் உள்ளிட்ட நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்பதுபோலவும், புகா்ப்பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு கரோனா தொற்று பரவல் விதிமுறைகள் தேவையில்லை என்பதுபோலவும் புகா்ப் பகுதி மக்கள் அலட்சியத்துடன் இருப்பதாகவும் சமூக ஆா்வலா்கள்

குற்றஞ்சாட்டுகின்றனா். நகா்ப்பகுதிகளில் உரிய நடவடிக்கைகள் காரணமாக கரோனா தொற்று குறைந்துவருவதையும், புகா்ப் பகுதிகள் மற்றும் கிராமங்களில் தற்போது கரோனா தொற்று பரவல் கூடியுள்ளதையும் சமூக ஆா்வலா்கள் சுட்டிக் காட்டுகின்றனா். ஆகவே வருவாய்த்துறையினரும், நகராட்சி மற்றும் காவல்துறையினரும் பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகளில் கரோனா தொற்றுப் பரவல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com