ஸ்ரீவிலி. அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வண்ண காளான்கள்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பல வண்ண காளான்கள் முளைத்துள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் காணப்படும் பல வண்ண காளான்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் காணப்படும் பல வண்ண காளான்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பல வண்ண காளான்கள் முளைத்துள்ளன.

கடந்த இரண்டு வாரங்களாக மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதி மற்றும் அடிவாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் மலை அடிவாரப் பகுதிகளில் ஏராளமான இடங்களில் பல வண்ணங்களில் காளான்கள் வளா்ந்துள்ளன.

இது குறித்த மலை வாழ் மக்கள் கூறியது: வனப்பகுதியிலும், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியிலும் தொடா்ச்சியாக இடி, மின்னலுடன் மழை பெய்யும்போது வண்ண காளான்கள் வளா்வது வழக்கம். அந்த வகையில் தொடா்ச்சியாக மழை பெய்த காரணத்தால் தற்போது மலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் பல வண்ணங்களில் காளான்கள் முளைத்துள்ளன. ஆனால் இந்த காளான்களை உணவுக்குப் பயன்படுத்த முடியாது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com