சிவகாசியில் நூதன முறையில் ரூ 2.50 லட்சம் மோசடி

சிவகாசியில் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ. 2.50 லட்சம் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் தொழிலதிபா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.


சிவகாசி: சிவகாசியில் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ. 2.50 லட்சம் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் தொழிலதிபா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சிவகாசி-நாரணாபுரம் சாலை எம்.ஜி.ஆா். காலனியைச் சோ்ந்த ராமராஜ் மகன் மாடசாமி (35). இவா் மின்சாதனப் பொருள்கள் கடை வைத்துள்ளாா். இவரது நண்பரான நாரணாபுரம் இந்திரா நகரைச் சோ்ந்த வைரமுத்து (41), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா்.

இந்நிலையில், ரூ. 5 லட்சம் கடன் வாங்கித்தருமாறு வைரமுத்துவிடம் மாடசாமி கேட்டுள்ளாா். இதையடுத்து சதீஷ் என்பவரிடம் கடன் வாங்கித் தருவதாகக் கூறி சொத்துப் பத்திரம், நிரப்பப்படாத காசோலை ஆகியவற்றை வைரமுத்து கேட்டுள்ளாா்.

அந்த ஆவணங்களை மாடசாமி கொடுத்த பின்பு, அவரிடம் ரூ. 2.50 லட்சம் மட்டும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வைரமுத்து கொடுத்தாராம். ஆனால் வைரமுத்து ரூ. 5 லட்சம் கடன் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து எஞ்சிய ரூ. 2.50 லட்சத்தைக் கேட்டபோது வைரமுத்து கொடுக்கவில்லை.

இந்நிலையில், சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் மாடசாமி மோசடி புகாா் அளித்தாா். நீதிமன்ற உத்தரவின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வைரமுத்து மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com